மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை
”தி அயன் லேடி” என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்படுகிறது.
டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரியதர்ஷினி என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார். ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் அவரது வேடத்துக்கு நடிகை தேர்வு நடந்தது. ஜெயலலிதாவின் முகத்தோற்றத்தை வைத்து பல நடிகைகளை பரிசீலிக்கப்பட்டனர்.
இறுதியில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யா மேனன் தேர்வாகி இருக்கிறார். இது குறித்து பேசிய இயக்குனர் பிரியதர்ஷினி,
ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்துக்கு ‘த அயன் லேடி’ என்று பெயர் வைத்துள்ளோம். ஜெயலலிதா வேடத்தில் நடிக்க அவரது குணநலன்களுடன் ஒத்துப்போகிற நடிகையை தேடினோம். நித்யாமேனன் பொருத்தமாக இருப்பார் என்று அவரை அணுகி கதை சொன்னோம். திரைக்கதை அவருக்கு பிடித்துப்போய் நடிக்க சம்மதித்து உள்ளார் என்றார்.
சசிகலா வேடத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமாரிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது . அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 24 ந்தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இதனிடையே ஜெயலலிதாவின் வாழ்க்கையை இயக்குனர்கள் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் ஆகியோரும் படமாக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.