டிடிவி தினகரன் அணியில் இருந்த முன்னாள் எம்எல்ஏ. கிணத்துக்கடவு தாமோதரன், அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துகொண்டார். முதலமைச்சரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய்கழகத்தில் இணைய வேண்டும் என்றும் தாமோதரன் வேண்டுகோள் விடுத்தார்.