முதியோர்களுக்காக பேட்டரி கார் ஓட்டிய மாவட்ட ஆட்சியர்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக இலவச பேட்டரி கார் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்தார். பேட்டரி காரை தாமே 500 மீட்டர் தூரத்திற்கு ஒட்டி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக 6 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த பேட்டரி காரில், அதிகபட்சமாக 7 பேர் பயணம் செய்ய முடியும் என்றும், இந்த வாகனம் சுற்றுச்சூழ் மாசு ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Exit mobile version