முடிஞ்சா பிடிங்க!  சி.பி.ஐ. கண்ணில் மண்ணை தூவிய மெகுல் ஷோக்ஷி! அதிகாரிகள் திணறல்…!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று வெளிநாடு பறந்த, நிரவ்மோடி மற்றும் அவரது மாமா மெகுல் ஷோக்ஷி ஆகியோரை இந்தியா கொண்டுவர சி.பி.ஐ. தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவர்கள் இருவருக்கும் எதிராக சர்வதேச போலீஸ் மூலம் ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மெகுல் ஷோக்ஷி சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி சி.பி.ஐ. கண்ணில் மண்ணை தூவி வருகிறார். தனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதால், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பா.ஜ.க. அரசு தன்னை தண்டிக்க முயல்வதாகவும், இந்திய சிறைச்சாலைகளில் தான் அடைக்கப்பட்டால், தனக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் உடல்நிலை ஒத்துழைக்காது என்றும் தெரிவித்தார்.

அவர் பயன்படுத்திய அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற வார்த்தையால், அவருக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இண்டர்போல். இதுகுறித்து அடுத்தமாதம் விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையில் அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அவரை நாடு கடத்தி விடலாம் என சி.பி.ஐ. கனவு கண்டு வந்தது.

ஆனால் அதற்கு முன்பே ஆண்டிக்குவா நாட்டின் குடிமகனாக மாறிவிட்டார் ஷோக்ஷி. அங்கு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அங்கு சென்றுவிட்டால், அவரை கைது செய்வது கடினம். காரணம் அவர் மீதான குற்றச்சாட்டை உள்ளூர் நீதிமன்றத்தில் நிரூபித்தால் மட்டுமே அங்கிருந்து அவரை நாடு கடத்த முடியும். அதற்குள் மோடி அரசின் ஆட்சி காலம் முடிந்து விடும் என கனவு கண்டு வருகிறார் ஷோக்ஷி. இவரது அடுத்தடுத்த அதிரடிகளால் திணறி வருகிறது சி.பி.ஐ.

Exit mobile version