மீனவர்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் அமைக்கும் விவகாரம் – 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மீனவர்கள் நலன்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலோர ஒழுங்கு மண்டல மேலாண்மை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் குழு, மீனவர்கள் நலனைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என பரிந்துரை செய்தது. அதன்படி தனிச்சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், தற்போது இதுதொடர்பான வரைவுச் சட்டம் தயாராக உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மீனவர்களின் நலனை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றுவது தொடர்பாக, 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டனர்.

Exit mobile version