மீண்டும் ஆர்.எஸ் .எஸ் அமைப்பை சீண்டும் ராகுல் காந்தி

உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தை, ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு கைப்பற்றுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

டெல்லியில் நாடுமுழுவதிலும் இருந்து வந்திருந்த கல்வியாளர்களை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து உரையாடினார். அப்போது அவர் ,ஆர்.எஸ் .எஸ் அமைப்பை கடுமையாக தாக்கி பேசினார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பொறுத்தவரை, இந்தியா என்பது தங்கப் பறவையாக, ஒரு பொருளாக நினைக்கிறது.

இந்தப் பொருளை பணமாக மாற்றி இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார் ராகுல் காந்தி.

அவர்கள் கையில் இருக்கும் தங்கப் பறவையை கைப்பற்றத் தேர்தல் எனும் போரில் முயல்வதாகவும், அவர்களால் ஒருமுறைதான் வெல்ல முடியும், தொடர்ந்து வெல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.

அரசின் கல்வி நிறுவனங்கள், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளை எல்லாம் திட்டமிட்டு கைப்பற்றி வருகிறார்கள். மக்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதிப்பதுதான் நாட்டின் வலிமையாகும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பலமுறை ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பற்றி ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதனால் அவர் பல வழக்குகளையும் சந்திக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version