மின் சட்டத்தில் மத்திய அரசு உத்தேசித்துள்ள திருத்தங்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர்”மின் சட்டம் – 2003-இல் உத்தேசித்துள்ள திருத்தங்களின் அபாயம் குறித்து பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். சாதாரண மனிதர்களை இது எந்த வகையில் எப்படி பாதிக்கும் என்பது குறித்து கடிதத்தில் விளக்கியுள்ளதாக கூறியுள்ள அவர், இந்த திருத்தத்துக்கு எதிராக ஒன்றிணைய வலியுறுத்தியுள்ளார்.
இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள் மற்றும் சிறு, குறு மின் நுகர்வோருக்கான மின் கட்டணம் நாடு முழுவதும் கடுமையாக உயரும் என கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.