மெய்நிகர் பணம் என அழைக்கப்படும் மின்னணு பண பரிவர்த்தனையான பிட்காய்ன்ஸ் முறை முதல் முறையாக பெங்களூருவில் உள்ள வணிக வளாக ஏடிஎம் மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய காலத்தில் மிகப் பிரபலமாகி வருவது பிட்காய்ன்ஸ் .
இந்த நாணயங்களை கண்ணால் பார்க்க முடியாது. டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையை உலக அளவில் மேற்கொள்ள முடியும் . இந்த முறையை பயன்படுத்தி உலகத்தில் எந்த மூலையில் இருப்பவர்களுக்கும் பணத்தை அனுப்ப முடியும் . தற்போது இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் மற்றும் டிடிஹெச் ரீசார்ஜ் போன்றவை பிட்காயினை பயன்படுத்தி செய்ய முடியும்.
பிட்காயின் உபயோகம் குறித்து ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் முதற்படியாக பெங்களூருவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இதற்கான ஏடிஎம் மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பிட்காயினை வாங்கவும் செய்யலாம் அதனை விற்கவும் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.