பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க்கின் சமூக வலைதள பக்கத்தை முடக்க உள்ளதாக ஹேக்கர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பேஸ்புக் பயனாளர்கள் 5 கோடி பேரின் கணக்குகளில் ஹேக்கர்கள் ஊடுருவியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பேஸ்புக் தளத்தில் உள்ள சுமார் 5 கோடி பேரின் கணக்குகளில், ஹேக்கர்கள் ஊடுருவியது 25ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, 27ம் தேதி அந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டதாக பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் பயனாளர்களின் தகவல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘வீயூ அஸ்’ என்ற வசதியை பேஸ்புக்கில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனிடையே, மார்க் சூகர்பெர்க்கின் பேஸ்புக் பக்கத்தை நாளை முடக்க உள்ளதாக ஹேக்கர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பேஸ்புக் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.