நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஷ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளி தலைமை ஆசியர்கள் தங்கள் பள்ளிகளை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு மற்றும் வைரஸ் காய்சல் தொடர்பான விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள முருகன், பள்ளி வளாகத்தில் உள்ள குடி நீர் மற்றும் கழிவு நீர் தொட்டிகளை முடிவைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தொற்று நோய்கள் ஏற்படாதவாறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.