மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து பொதுமக்கள் வழிபாடு

மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

மறைந்த மூதாதையர்களுக்கு அமாவாசையின் போது வழிபாடு நடத்துவது காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. புரட்டாசி மற்றும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசையின் போது. முன்னோர்களுக்கு திதி கொடுத்து புனித நதிகளில் நீராடினால் விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். புரட்டாசி அமாவாசை மஹாளய அமாவாசை என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, மஹாளய அமாவாசை தினமான இன்று, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். முன்னோர்களுக்கு திதி கொடுத்த அவர்கள், கடலில் புனித நீராடி ராமநாத சுவாமியை வழிபட்டனர். ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடினர்.

திருவாரூரில் உள்ள கமலாலாய குளத்திலும் ஏராளமானோர் திதி கொடுத்தனர். இதேபோன்று, புனித நீர் நிலைகள், கடல் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் திதி கொடுத்தும் பொதுமக்கள் வழிபட்டனர்.

Exit mobile version