மழை இல்லாத காலங்களில் தமிழகத்திற்கு காவிரி வருமா?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கர்நாடக அரசு, ஆண்டுதோறும், தமிழகத்திற்கு 177 புள்ளி 25 டி.எம்.சி., காவிரி நீரை வழங்க வேண்டும். ஜூன் மாதத்தில் 13 புள்ளி 2 டி.எம்.சி நீரை திறந்துவிட்ட கர்நாடக அரசு, ஜூலை மாதம் 124 புள்ளி 6 டி.எம்.சி நீரையும், ஆகஸ்ட் மாதம் 161 புள்ளி 5 டி.எம்.சி. நீரையும் திறந்துவிட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் மூன்று மாதங்களில் மட்டும், 299 புள்ளி 3 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடக அரசு வழங்கி உள்ளது. இது இந்த ஆண்டிற்கான ஒதுக்கீட்டை விட, 122 டி.எம்.சி அதிகமாகும். பெரும்பாலும் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் அதிகமான தண்ணீர் தமிழகத்திற்கு வந்துள்ளது. காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்றநிலையில், மழை இல்லாத காலங்களில் அப்படி திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version