உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கர்நாடக அரசு, ஆண்டுதோறும், தமிழகத்திற்கு 177 புள்ளி 25 டி.எம்.சி., காவிரி நீரை வழங்க வேண்டும். ஜூன் மாதத்தில் 13 புள்ளி 2 டி.எம்.சி நீரை திறந்துவிட்ட கர்நாடக அரசு, ஜூலை மாதம் 124 புள்ளி 6 டி.எம்.சி நீரையும், ஆகஸ்ட் மாதம் 161 புள்ளி 5 டி.எம்.சி. நீரையும் திறந்துவிட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் மூன்று மாதங்களில் மட்டும், 299 புள்ளி 3 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடக அரசு வழங்கி உள்ளது. இது இந்த ஆண்டிற்கான ஒதுக்கீட்டை விட, 122 டி.எம்.சி அதிகமாகும். பெரும்பாலும் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் அதிகமான தண்ணீர் தமிழகத்திற்கு வந்துள்ளது. காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்றநிலையில், மழை இல்லாத காலங்களில் அப்படி திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மழை இல்லாத காலங்களில் தமிழகத்திற்கு காவிரி வருமா?
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள், தமிழ்நாடு
- Tags: கடந்த 3 மாதத்தில் மட்டும் 300 டி.எம்.சிகாவிரி
Related Content
காவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு - தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை
By
Web Team
September 22, 2020
முதலமைச்சரின் அறிக்கையே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு - அமைச்சர் ஜெயக்குமார்
By
Web Team
September 21, 2020
பரமத்திவேலூரில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
By
Web Team
April 23, 2019
காவிரியில் அணைகள் கட்டுவதற்கு ஆட்சேபணை இல்லை என்று கூறியவர் கருணாநிதி: ஓ.பன்னீர்செல்வம்
By
Web Team
April 13, 2019
கருணாநிதியின் அனுமதியுடனே காவிரியில் கர்நாடகா அணை கட்டியது: ஓ.பன்னீர்செல்வம்
By
Web Team
March 30, 2019