மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள டிட்லி புயல் மேலும் வலுவடைந்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள டிட்லி புயல் மேலும் வலுவடைந்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வாநிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மத்திய வங்க கடலில் நிலைகொண்டுள்ள டிட்லி புயல், மேலும் வலுவடைந்துள்ளதாக தெரிவித்தார்.  இந்த புயல் 370 கிலோ மீட்டர் வேகத்தில் ஆந்திரா, ஒடிசா கடற்பகுதியில் நாளை கரைகடக்கவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார். இதேபோல், அரபிக்கடல் பகுதியில் நிலவிவந்த லூபன் புயல் வலுபெற்று ஓமன் கரையோரம் மையம் கொண்டுள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.  இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என குறிப்பிட்ட அவர், அடுத்த 11 மற்றும் 14 ஆகிய தேதகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பல இடங்களில் மிதமான மழைக்கு வாய்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version