காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மோடி ஆட்சியின் தோல்விகளை காங்கிரஸ் அம்பலப்படுத்தி வருவதாக கூறினார்.
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஒருபோதும் வலியுறுத்தியது கிடையாது என்று சிதம்பரம் விளக்கம் அளித்தார்.
விலை குறைவு என்றால் 37 ரபேல் விமானங்களை மட்டும் மோடி அரசு வாங்குவது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்காதது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.