கர்நாடக சட்டமன்றத் தேர்தல்.. காங்கிரஸ் கட்சி 115க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 113 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சியமைக்க தகுதி பெற முடியும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 115க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 73 புள்ளி ஒன்று ஒன்பது சதவிகித வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version