மத்திய சுகாதாரத்துறையால் சிறந்த மருத்துவ நிலையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 13 அரசு மருத்துவ நிலையங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட தரச்சான்றிதழ் மற்றும் பரிசு தொகையினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தேசிய ஊரக திட்டத்தின் கீழ் சிறந்த மருத்துவ சேவை புரியும் அரசு மருத்துவமனைகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படும். அதனடிப்படையில் தமிழகம் வந்த தேசிய ஆய்வுக் குழு, 7 மாவட்ட தலைமை மருத்துவமனைகளையும், 6 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தேர்ந்தெடுத்தது.
இதனையடுத்து மத்திய அரசால் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் சுமார் 2 கோடியே 8 லட்சத்திற்கான பரிசு தொகையினை இந்த 13 அரசு மருத்துவ நிலையங்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது உடனிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், இதே போன்று தமிழகத்தில் உள்ள 100 சதவீத மருத்துவமனைகளும் விருதுகளைப் பெற நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.