மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பதில்களை கேட்டறிந்தனர். அப்போது வாக்களர்களின் உரிமை குறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், எம்.பி மற்றும் எம்எல்ஏ-க்கள் தொடர்பான குற்ற வழக்கில் தண்டனை பெருவதற்கு முன்பு, அவர்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியது. இந்த நிலையில் குற்றப் பின்னணி உடையவர்கள் தங்கள் சின்னத்தில் போட்டியிட அரசியல் கட்சிகள் அனுமதிக்க கூடாது என, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடலாமா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் இதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால் ஆட்சேபம் தெரிவித்தார். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version