மகாபுஷ்கர விழா – புனித நீராட நிபந்தனையுடன் தமிழக அரசு அனுமதி!

 

தாமிரபரணி குறுக்குத்துறை, தைப்பூசத்துறையில் பக்தர்கள் புனித நீராட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வரும் 12ஆம் தேதி முதல், 23ஆம் தேதி வரை மகாபுஷ்கர விழா கொண்டாடப்படவுள்ளது. ஆனால் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறுக்குத்துறை, தைபூசத்துறை ஆகிய இடங்களில் புனித நீராட மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, மகாதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணையின்போது, தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க அரசு ஒப்புதல் அளித்தது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குறுக்குத்துறை, தைபூசத்துறை ஆகிய இடங்களில் புனித நீராட நிபந்தனையுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மழைக்காலம் என்பதால் ஆற்றின் நீரோட்டத்தையும், ஆழத்தையும் பொறுத்து பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version