பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் சுமார் 1லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 72 ஆயிரத்து 581 இடங்களுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இந்தாண்டுக்கான பொது கலந்தாய்வு நிறைவடைந்தது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு பிரிவு, பொதுப்பிரிவு என இதுவரை 74 ஆயிரத்து 601 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 97ஆயிரத்து 980 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இறுதி ஒதுக்கீட்டில் 3ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்த இடங்களை ரத்து செய்ய வாய்ப்புள்ளதால், சுமார் ஒரு லட்சம் காலியாக உள்ள நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், கடந்த கல்வி ஆண்டுகளை விட நடப்பாண்டில் மிக குறைந்த அளவிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version