பொய் சொல்வதை நிறுத்துங்கள் – ராகுல் காந்தி சாடல்

ரபேல் விவகாரத்தில் பொய் சொல்வதை நிறுத்துங்கள் என பாஜகவினரை, ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரத்தில் ,அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே இந்திய அரசு சிபாரிசு செய்தது என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியது பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இதனால் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா இடையே கடும் வார்த்தை போர் நீடிக்கிறது. இந்நிலையில் ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆதரிக்க இயலாதவற்றை ஆதரிப்பதற்காக, போலியான நேர்மையுடன், பொய்களை அள்ளி வீசுவதுதான், அருண் ஜேட்லியின் சிறப்பும், திறமையும் ஆகும் என்று கூறியுள்ளார்.

பிரதமரும், நிதி அமைச்சரும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version