பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது- அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

 

பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குரவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.

போக்குவரத்து துறையில் ஓட்டுநர் உரிம பணிகளுக்காக, இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தும் முறையை, சென்னை கே.கே. நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமைச்சர் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பித்தல், வாகனங்களுக்கான வரி ஆகியவற்றுக்கான கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது என்றார்.

http:/parivahan.gov.in/padichan என்ற இணைய முகவரியில் இந்த வசதியை பெறலாம் என்று அவர் கூறினார். 86 ஆர்டிஓ அலுவலகங்கள், 59 பகுதி அலுவலகங்களில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், உரிமம் புதுப்பித்தலை பொறுத்தவரை, பணம் செலுத்தி விட்டு, ஒரு மணி நேரத்தில் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

ஓட்டுநர் உரிமம் பெற, தமிழகத்தில் 14 இடங்களில் ஆட்டோமெடிக் டெஸ்டிங் டிராக் கொண்டு வரப்படுவதாகவும், இது, முதல் கட்டமாக,
கரூரில் செயல்படுத்தபட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தீபாவளிக்கு 22 ஆயிரம் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
அடுத்த வாரம் 475 புதிய பேருந்துகளை முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளதாக அவர் கூறினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு சவாலாக இருந்தாலும், பேருந்து கட்டணம் உயர்த்தபடமாட்டாது என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மெட்ரோ, சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் இரண்டுலும் ஓரே கார்டில் பயணிக்கும் வசதிக்காக, ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

Exit mobile version