பேச்சுவார்த்தை ரத்து சரியான முடிவு – இந்திய ராணுவ தளபதி

காஷ்மீரில் 3 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட நிலையில் பாகிஸ்தானுடன் அமெரிக்காவில் நடக்க இருந்த பேச்சு வார்த்தையை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிருப்தி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் , இதுபோன்ற சம்பவங்கள் தொடர அனுமதிக்க முடியாது என்றார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் தீவிரவாதிகளை தடுக்க, முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

எல்லையின் அந்த பகுதியில் இருந்து தீவிரவாதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர், இதுபோன்ற சூழ்நிலையில், பேச்சுவார்த்தை பற்றி அரசே முடிவு செய்ய முடியும் என்றார். அமைதிக்கான பேச்சுவார்த்தை மற்றும் தீவிரவாதம் ஆகிய இரண்டும் ஒன்றாக நடைபெற முடியாது என்ற அரசின் முடிவை நான் ஏற்கிறேன் என்றும் பிபின் ராவத் தெரிவித்தார்.

Exit mobile version