பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ராம்கோபால் வர்மாவின் பைரவா கீதா

சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கும், அதிரடியான திரைப்படங்களுக்கும் புகழ்பெற்ற இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் புதிய படைப்பான பைரவா கீதா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராம்கோபால் வர்மா தயாரிக்கும் புதிய படம் பைரவா கீதா. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. மலையாள இயக்குனர் சித்தார்த் இப்படத்தை இயக்கி உள்ளார். தனஞ்ஜெயா என்ற புதுமுகம் கதாநாயகனாகவும், ஈரா மோர் என்பவர் கதாநாயகியாகவும் இப்படத்தில் நடித்து உள்ளனர்.

சாதிய பின்னணி மோதல்களை களமாக கொண்டு இப்படத்தை தயாரித்துள்ளார் ராம்கோபால் வர்மா. ரவிஷங்கர் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களை ஈர்த்துள்ளது. தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் இந்தி திரையுலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

வரும் 12-ந் தேதி திரைக்கு வரவுள்ள இத்திரைப்படம் ராம்கோபால் வர்மாவின் வெற்றிப் பட்டியலில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Exit mobile version