பெரிய பதவியில் தகுதி இல்லாதவர்கள் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை இந்த மாத இறுதியில் நியூயார்க்கில் நடைபெற இருந்தது.
இந்நிலையில், காஷ்மீரில் நேற்று முன் தினம் மூன்று போலீசார் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இந்திய அரசு, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்தியாவின் இந்த அணுகுமுரையால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடுப்படைந்து உள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், பேச்சுவார்த்தை தொடர்பான இந்தியாவின் எதிர்மறையான அணுகுமுறை, வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார்.
பெரிய பதவிக்கு தகுதி இல்லாதவர்கள் பொறுப்பில் இருப்பதை, தாம் சிறு வயது முதல் பார்த்து வருவதாகவும், தனது அதிருப்தியை, அவர் வெளிப்படுத்தியுள்ளார்.