பொது இடங்களில் பெண்களை பாதுகாப்பது தொடர்பாக ,சென்னையில் 425 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நிர்பயா திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள முக்கிய 8 நகரங்களில் பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான திட்டங்களை செயல்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சி சார்பில் இதற்கான கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. 425 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தை மத்திய அரசு ஏற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தை முதன் முதலில் செயல்படுத்த உள்ள நகரம் சென்னைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் கீழ், குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடங்கள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தப்பட உள்ளது. நவீன கழிப்பறைகளை அமைக்கப்பட்டு அப்பகுதிகளில் சுகாதாரம் உறுதி செய்யப்படும். அவசர காலத்தில் அழைப்பதற்கான உதவி எண்கள் மற்றும் கைபேசி செயலிகளை உருவாக்கப்படும் . பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெண் போலீஸாரை கொண்ட ரோந்து வாகனங்களை இயக்கவும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து பேருந்துகளை பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.