“பெண்களுக்கு ஏன் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் தெரியுமா?”-பிரதமர் விளக்கம்

வாய்ப்புக் கொடுத்தால் பெண்கள் எதையும் சாதிப்பார்கள் என்று சுயஉதவி குழுவினருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளிடம் நமே ஆப் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், மகளிர் சுய உதவிக்குழுவினருடன் காணொலி காட்சி மூலம், பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள்  அற்புதமாக உள்ளதாக தெரிவித்தார்.

எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும்  பெண்கள் இன்று அதிகளவில் பணியாற்றி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், நினைத்து பார்க்க முடியாத வகையில் விவசாயம், பால் வளம் ஆகிய துறைகளில் பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். பெண்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு சரியான வாய்ப்புக்கள் ஏற்படுத்தி தருவது மிக முக்கியமானதாகும் என்று கூறிய அவர்,  வாய்ப்புக் கொடுத்தால் அவர்கள் எதையும் சாதிப்பார்கள் என்றும் தெரிவித்தார்”.

சத்தீஷ்கரில் பிகான் பஜார் என்ற பெயரில் மகளிர் குழுவால் உருவாக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தனர். அதனை நமோ ஆப் மூலம் பிரதமர் மோடி பார்வையிட்டு, பெண்களுடன் கலந்துரையாடினார். 

Exit mobile version