பெண்களுக்கு உரிமை வழங்குகிறோம் என்ற பெயரில் பாரம்பரியத்தை அழிக்கக்கூடாது என, தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களும், அவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பாஜக அரசின் நோக்கம் என்றார். ஆனால், சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு கலாச்சாரத்தை சீர்குலைக்கும் விதமாக அமைந்துள்ளது என்று தமிழிசை குறிப்பிட்டார்.
கோயில்கள் மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்களில் சட்டத்தின் தலையீடு இருக்க கூடாது என்று அவர் தெரிவித்தார். இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட போது மவுனம் காத்த காங்கிரசுக்கு, தமிழர்கள் குறித்தோ, மீனவர்கள் குறித்தோ பேச உரிமை இல்லை என்று அவர் கூறினார்.