கமுதி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
கமுதி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் அரியநாட்சி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நடந்த இந்த போட்டி, வண்ணாங்குளம் கிராமத்தில் இருந்து கமுதி சாலை வழியாக நடைபெற்றது. பெரிய மாடு, சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. சின்ன மாட்டு வண்டியில்,15 வண்டிகளும் பெரிய மாட்டு வண்டியில் 14 வண்டிகளும் கலந்து கொண்டன.
புழுதி பறக்க ஓடிய மாட்டு வண்டிகளை பார்க்க பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்திருந்தனர். வெற்றி பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம் ,குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கபட்டன.