ராமநாதபுரம்..கலெக்டர் அலுவலகமா? இல்லை திமுக கட்சி அலுவலகமா?

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திமுகவின் கட்சி அலுவலகமாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில், ஸ்டாரின் பிறந்த நாள் முன்னிட்டு, ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மிகப்பெரிய விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆட்சியர் அலுவலகம், திமுகவின் கட்சி அலுவலகமாக மாறி காட்சியளிக்கிறது. மேலும், அங்குள்ள பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கட்சிக்காரர்கள் போல் நடந்து கொள்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இதுகுறித்து பல்வேறு தரப்பினர் அளித்த புகாரின்பேரில், மாவட்ட வருவாய்துறையினர், சம்பவ இடத்தில் வைத்திருந்த விளம்பரப் பதாகையை அகற்றி எடுத்துச் சென்றனர். எதற்கெடுத்தாலும் விளம்பரம் தேடும் ஸ்டாலின், தற்போது அரசு அலுவலகங்களையும் விட்டு வைக்கவில்லை என பொதுமக்கள் விமர்சிக்கின்றனர்.YouTube video player

Exit mobile version