சிபிஐ மற்றம் வருமான வரித்துறை மூலமாக மத்திய அரசு விடுக்கும் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஹைதரபாத்தில் தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொலிட் பீரோ கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும், கட்சியை பலப்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற மாநாட்டில் பேசிய சந்திரபாபு நாயுடு, அதிகாரம் தங்கள் கையில் உள்ளது என்பதற்காக சிபிஐ மூலமாகவும், வருமான வரித்துறை மூலமாகவும் மத்திய அரசு மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்தார்.
மோடி அரசுக்கு அஞ்ச மாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், ஆட்சியும் அதிகாரமும் எப்போதும் நிரந்தரம் இல்லை என்பதை பாஜக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று புதிய பாணியில் பிரதமரை எச்சரித்தார்.