புதிய இந்தியாவை நோக்கி பயணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவை நோக்கி மிகப் பெரிய மாற்றங்களில், இந்தியா பயணித்துக் கொண்டிருப்பதாக கூறினார்.
துரிதமான பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை இந்தியா கண்டு வருவதாகவும், வரும் ஆண்டுகளில், உலக வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் இந்தியா இருக்கும் என்று, உலகின் அனைத்து முக்கிய நிறுவனங்களும் நம்புவதாக தெரிவித்தார்.
பண வீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், நடுத்தர வர்க்கம் உயர்ந்து வருவதாக கூறிய பிரதமர், சுதந்திர இந்தியாவில் ஜிஎஸ்டி வரி தான் மிகப் பெரிய வரி சீர்திருத்தம் என்றும், இது ஒட்டுமொத்த தேசத்தை ஒரே சந்தையாக மாற்றியுள்ளதாக தெரிவித்தார். நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.