பீகாரில் 11 ஆயிரம் பாட்டில் பீர் மாயமான விவகாரத்தில் அவற்றை எலி குடித்துவிட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
பீகாரில் 2016-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. இதனையடுத்து மதுகுடிப்போர், விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி கொண்டு வருவது அதிகரித்தது. இதுபோன்று சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மது, பீர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் மாவட்ட உயர் அதிகாரிகளிடம் பேசிய மாநில முதலமைச்சர், நிதிஷ் குமார் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை அழித்துவிட உத்தரவிட்டார். அதன்படி கைமூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை அழிக்க மாவட்ட அதிகாரிகள் சென்றனர். அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிகாரிகள் கிடங்கை திறந்து பார்த்தபோது மது பாட்டில்கள் அனைத்தும் காலியாக இருந்தது.
இது தொடர்பாக பேசிய மாவட்ட அதிகாரிகள் ,மதுபாட்டில்கள் அனைத்தையும் எலி குடித்துவிட்டது என்று கூறியுள்ளனர்.
11 ஆயிரம் பீர் பாட்டில்கள் ,16 லட்சம் ஐஎம்எல் மது, 9 லட்சம் லிட்டர் உள்நாட்டு மது வகை என அனைத்தும் காலியாக இருந்தது. அனைத்திலும் சிறிய துளைபோடப்பட்டுள்ளது. பீர் அனைத்தையும் எலிகள் குடித்திருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்” என்று கூறியுள்ளார் மாவட்ட அதிகாரி கல்பனா குமார். 2017-ம் ஆண்டு இதுபோன்று மதுபாட்டில்களில் மது இல்லாத நிலையில் எலிகள் மீதே குற்றம் சாட்டப்பட்டது.
Discussion about this post