பீகாரில் குவியல் குவியலாக சிக்கிய துப்பாக்கிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் ஏ.கே.,47 ரக துப்பாக்கிகள் மற்றம் பிற ஆயுதங்கள் குவியல் குவியலாக கண்டெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த துப்பாக்கிகள், ஆயுதங்கள் பல்வேறு காலங்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடப்பட்டவை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆயுதங்கள பீகாரில் விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரு துப்பாக்கி 6 முதல் 8 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகாரின் பல இடங்களில் உள்ள கிணறுகள், பாதாள சாக்கடைகள், உபயோகமற்ற வீடுகள், மணலுக்கு அடியில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆயுத கடத்தல் சம்பவங்களில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் சிலரது கைவரிசை இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆயுத கடத்தல் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.