பி எம் டபிள்யூ வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டும் இந்தியர்கள்.

 

இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் 7 ஆயிரத்து 915 வாகனங்களை விற்று பி எம் டபிள்யூ சாதனை படைத்துள்ளது
ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசுக் கார் தயாரிப்பாளரான பிஎம்டபிள்யூ, இந்தியாவில் பிஎம்டபிள்யூ, மினி, மோட்டாராட் ஆகிய மூன்று வணிகப் பெயர்களில் கார்களையும், இருசக்கர வாகனங்களையும் விற்பனை செய்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல், செப்டம்பர் வரையிலான கால அளவில், பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா நிறுவனம் 7 ஆயிரத்து 915 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே கால அளவில் இந்நிறுவனத்தின் விற்பனை 7,424 வாகனங்களாக இருந்தது. அந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 11 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version