திருப்பதியில் பிரம்மோற்சவம் விழா நடப்பதையொட்டி பழனியில் இருந்து பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
திருமலை திருப்பதியில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவயத்தின் போது, திருமலை கோயில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும். இதற்காக, பழனியில் இருந்து பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பழனி புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் நாள்தோறும் ஆயிரம் கிலோ அளவுக்கு 10 நாட்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. செவ்வந்தி, விருச்சி பூ, சாமந்தி, வாடாமல்லி உள்ளிட்ட பூக்கள் பக்தர்களிடமிருந்து பெறப்பட்டு, பேருந்து மூலமாக திருப்பதி அனுப்பி வைக்கப்படுகிறது. பக்தர்களின் ஒத்துழைப்பால் ,16 ஆண்டுகளாக திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு பூக்கள் அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.