கத்தோலிக்க தேவாலயங்களில் எழும் பாலியல் புகார் குறித்தும், அவற்றை மூடி மறைக்க நடைபெறும் முயற்சிகளையும் இனி பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என போப் ஃபிரான்ஸிஸ் எச்சரித்துள்ளார்.
பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தேவாலயங்களுக்கும் உண்டு என்று கூறியுள்ள அவர், இத்தகைய குற்றங்களை தடுப்பதால் அதன் மூலம் பாதிப்பிற்கு உள்ளாகும் அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க முடியும் என்று தெரிவித்தார்.
தேவாலயங்கள் மற்றும் துறவிகள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியது அவசியம் என்றும் போப் ஃபிரான்ஸிஸ் கேட்டுக் கொண்டார். பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.