பாலாற்றின் குறுக்கே தடுப்பணைக்கான அடிக்கல் நாட்டு விழாவை அமைச்சர் பெஞ்சமின் துவக்கி வைத்தார்

திருக்கழுக்குன்றம் அருகே, ஈசூர் வல்லிபுரத்தில் பாலாற்றின் குறுக்கே, தடுப்பணைக்கான அடிக்கல் நாட்டு விழாவை அமைச்சர் பெஞ்சமின் துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், ஈசூர் வல்லிபுரத்தில் பாலாற்றின் குறுக்கே தமிழக அரசு பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பு மூலம் தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், அதற்கான அடிக்கல்லை நாட்டினார். 30 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த தடுப்பணை கட்டப்பட உள்ளது. சுமார் 750 மீட்டர் நீளமும் ஒன்றரை மீட்டர் உயரமும் கொண்ட இந்த தடுப்பணையால் ஏறத்தாழ 20 கிராமங்கள் பயன்பெறுகின்றன. இந்த விழாவில், ஆட்சியர் பொன்னையா மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version