பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் அமைச்சர் எஸ்.பி வேலுமணி

கோவையில் பேரூர் வட்டம் பச்சினாதிபதி வட்டம் கிராமத்தில் நேற்று பலத்த மழை பெய்ததில் அந்த பகுதியில் வசிக்கும் மலை வாழ் மக்கள் வசிக்கும் வீடுகள் சேதம் அடைந்தது அந்த பகுதியில் நகராட்சி நிர்வாகம் செயலாக்க திட்ட துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம் பச்சினாம்பதி கிராமத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது இந்த மழையினால் அந்த பகுதியில் வசிக்கும் 30 கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் மற்றும் சிற்றுண்டி வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் மலை வாழ் மக்கள் வசிக்க குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் உடனடியாக கட்டி தரப்படும் என்றும் உறுதியளித்தார்.

Exit mobile version