பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்கும் நோக்கில் பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் கணிசமான தொகையை அமெரிக்கா வழங்கி வருகிறது. ஆனால் அண்மைக்காலமாக பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தொகையானது வேறு வகையில் செலவழிக்கப்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதாக கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தப்போவதாகவும் அறிவித்திருந்தார். இந்தநிலையில், பாகிஸ்தான் ராணுவத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் வழங்க இருந்த 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியை நிறுத்த முடிவு எடுத்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னர் பாலஸ்தீனத்துக்கு வழங்கி வந்த நிதியுதவியை அமெரிக்கா நிறுத்திய நிலையில், இந்த விவகாரம் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட இருந்த நிதி நிறுத்தி வைப்பு
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள்
- Tags: அமெரிக்க அதிபர்கூடுதல் நிதியுதவிபாகிஸ்தான்
Related Content
கொரோனா அச்சுறுத்தல்: அமெரிக்காவில் அவசர நிலையை அறிவித்தார் அதிபர் டிரம்ப்
By
Web Team
March 14, 2020
பாக். நிலைகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்: வீடியோ வெளியானது
By
Web Team
March 6, 2020
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு போட்டியாக இருக்கும் ஜோ பிடன்: யார் அவர்?
By
Web Team
March 5, 2020
இந்தியாவுக்கு, அதிபர் டிரம்புடன் வரும் மகள் இவாங்கா
By
Web Team
February 21, 2020
இந்தியா - அமெரிக்கா இடையே மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்: அதிபர் டிரம்ப் தகவல்
By
Web Team
February 21, 2020