பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மையத்தில், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இந்திய விஞ்ஞானி கைது செய்யப்படுள்ளார்.
இந்தியாவின் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் கடந்த 4 ஆண்டுகளாக விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர் நிஷாந்த் அகர்வால். நாக்பூரில் வசித்து வரும் நிசாந்த் அகர்வாலின் நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பதை ராணுவ புலனாய்வு பிரிவினர் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து அவர் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நிஷாந்த் அகர்வால் பாகிஸ்தானில் ஐ எஸ் ஐ அமைப்புக்காக உளவு பார்த்து வந்ததை, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து, ரகசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விஞ்ஞானி நிசாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரம்மோஸ் ஏவுகணை குறித்த தகவல்களை அமெரிக்காவுக்கும் நிஷாந்த் அகர்வால் தெரிவித்து இருப்பது, பாதுகாப்புத் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலக அளவில் நவீன ஏவுகணைகளில் பிரம்மோசுக்கு முக்கிய இடமிருப்பது குறிப்பிடத்தக்கது.