இளமை திரும்புதே! புரியாத புதிராச்சே! மரபணு சிகிச்சை மூலம் வயதை குறைக்க முடியுமா?

அழகியலின் புதுமைகள்!

பொதுவாகவே மனிதர்களுக்கு  நம்முடைய மேனியினை பராமரித்துக் கொள்வது என்பது மிகவும் பிடித்தமான ஒரு காரியம். குறிப்பாக சொல்லப்போனால் தன்னை அழகு படுத்துக்கொள்வதில் பெண்கள் தான் ஸ்பெஷலிஸ்ட் என்றே சொல்லலாம். ஆனாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் எல்லோருமே தனது சருமம் இளமையாகவே தோற்றம் அளிக்க வேண்டும் என்று விரும்புவர். அதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யவும் தயங்கமாட்டார்கள். பலவகை ரசாயணப் பொருட்களை பயன்படுத்தி அவர்களது தற்போதைய வயதில் இருந்து தன்னை சிறிய வயதாக காட்டிக்கொள்ள பல முயற்சிகளை செய்வார்கள்.

மற்றும் அழகுசாதன பொருட்களைப் பயன்படுத்தி தன்னை இளமையாகவும், அழகாகவும்  பாவித்துக்கொள்வார்கள். இந்நிலையில் மருத்துவத் துறையில் எண்ணற்ற சிகிச்சை முறைகள் வந்துள்ளது. தோல், முடி  மற்றும் அழகியல்  சார்ந்த மருத்துவ முறைகள் வந்துள்ளன. மேலும் மரபணு சிகிச்சை மூலம் வயதை குறைக்க முடியும் என்பதை முந்தைய ஆய்வில் நிரூபித்தார் ஹார்வர்ட் விஞ்ஞானி டேவிட் ஷின்கிளயர். தற்போது அதனையும் தாண்டி வேதிக் கலவை மூலமும் வயதைக் குறைக்க முடியும் என்பதை நிரூபித்து உள்ளதாக தெரிவித்தார்.

புதிய வேதிப்பொருள்!!

கேம்பிரிட்ஜ்: மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் வேதிக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து  இந்த வேதிப்பொருள் குறித்து  அவர் தனது ட்விட்டர் பக்கதில் அதன் தன்மையை பற்றிக் கூறியுள்ளார். டேவிட் ஷின்கிளயர் கூறியதாவது; “மரபணு சிகிச்சை மூலம் வயதைக் குறைக்க முடியும் என்பதை எங்களது முந்தைய ஆய்வில் நிரூபித்தோம்.  அந்த வெற்றியை தொடந்து பல ஆண்டுகளாக  வேதிப் பொருட்களை வைத்து வயதை குறைக்க முடியுமா என்ற சோதனையில் ஈடுபட்டோம். அதன்படி பல நாட்களுக்கு பிறகு பலன் கிடத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இது தொடர்பாக எங்கள் குழு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. அந்த ஆராய்ச்சியின் விளைவாக வயதைக் குறைக்கும் மூலக் கூறுகளைக் கண்டுபிடித்துள்ளோம் என்றும், இது சாதாரண மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குறைந்தவிலையில் மனித செல்களுக்கு புத்துணர்வூட்டுவதற்கான ஒரு முன்நகர்வு இது” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ஆய்வானது பல கட்ட சோதனைகளுக்கு பிறகே மனிதர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் முதற்கட்டமாக இந்த வேதிக்கலவை எலி மற்றும் குரங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது என்றும், பரிசோதனையின் முடிவில், மூளைத் திசுக்கள், கிட்னி, பார்வை ஆகியவற்றில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக டேவிட் ஷின்கிளயர் தெரிவித்தார்.

Exit mobile version