பவானி ஆற்றுப் படுக்கையில் வெள்ள எச்சரிக்கை!

 

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக சிறுவாணி மற்றும் குந்தா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு, சிறுவாணி அணை முழுவதுமாக நிரம்பி உள்ளது. இதனால், அணைக்கு வரும் மொத்த நீரும் திறந்து விடப்படுகிறது. இங்கிருந்து வெளியேற்றப்படும் நீர் பவானி ஆற்றில் செல்வதால், அங்குள்ள கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 10 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரும் பவானி ஆற்றில் கலந்து பில்லூர் அணைக்கு செல்கிறது. இதனிடையே, மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மேலும் இருநாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version