பல்கலைக்கழக மானிய குழு விவகாரம் ; மத்திய அரசுக்கு தமிழக அரசு எதிர்ப்பு

பல்கலைக்கழக மானிய குழுவிற்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் அமைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

யூ.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு பதிலாக உயர்கல்வி ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

யூ.சி.ஜியை கலைத்துவிட்டு உயர் கல்வி ஆணையம் அமைக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி ஆணையம் குறித்து அனைத்து மாநில அரசின் கருத்துக்களையும் மத்திய அரசு கேட்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு கலைக்கப்பட்டால், தமிழக பல்கலைக்கழகங்களுக்கு கிடைக்கும் நிதிஆதாரம் பாதிக்கப்படும் என்றும் உயர் கல்வி ஆணையத்தால் மாநில உரிமைகள் பறிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version