பருவமழை குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் சென்னை, மதுரை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 121 பல்நோக்கு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே, மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை மழை காலங்களில் ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.