பந்தயத்தின் போது, மிரண்டு போய் வயல் வெளியில் ஓடிய மாடுகள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சிங்கிலிபட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 9 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சிங்கிலிபட்டியில் தொடங்கி விளாத்திகுளம் மெயின் ரோடு வரை உள்ள எட்டு கிலோமீட்டர் தூரம் பந்தயம் நடைபெற்றது.

இதில் மேலதட்டப்பாடியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மாட்டு வண்டி முதலிடத்தையும், ஈராட்சி அஸ்வினி என்பவரின் மாட்டு வண்டி 2வது இடத்தையும், 3வது இடத்தை பாளையங்கோட்டை வெங்கடேஷ் என்பவரின் மாட்டு வண்டியும் பிடித்தன. 

சின்ன மாடு பிரிவில் 16 வண்டிகள் கலந்து கொண்டன. சிங்கிலிபட்டி முதல் பிள்ளையார் நத்தம் வரை ஆறு கிலோமீட்டர் தொலைவு போட்டி நடைபெற்றது.

இதில் முதல் இடத்தை சிங்கிலிபட்டி பெருமாள் சாமியின் மாட்டு வண்டியும், இரண்டாவது இடத்தை சிந்தலை செல்வராஜின் மாட்டு வண்டியும், 3வது பரிசை சரண்யா குட்டி என்பவரது மாட்டு வண்டியும் பிடித்தன. போட்டியின் போது சில மாடுகள் மிரண்டு போய், வயல் வெளியில் ஓட்டம் பிடித்தன. 

தேமுதிக சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அழகர் சாமி பரிசுகள் வழங்கினார்.

Exit mobile version