குஜராத்தில் நிறுவப்பட உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை சீனாவில் தயாரிக்கப்படுவது, அவரை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய சிலையாக பட்டேல் சிலையை அமைக்கப் போவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி பட்டேலின் 143 வது பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி 182 அடி உயரமுடைய இந்தச் சிலை குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் திறக்கப்படுகிறது.
இந்தச் சிலையின் பின்பக்கத்தில் மேட் இன் சைனா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதை ராகுல் சுட்டிக் காட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் சட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், பட்டேலுக்கு மத்திய அரசு சிலை அமைத்து வருவதை சுட்டிக் காட்டினார். ஆனால், இந்தச் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டு இருப்பது பட்டேலை அவமதிக்கும் செயல் என்று அவர் விமர்சித்தார்.