மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்காக தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எதிர் கொள்ளும் வகையில் கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மூலம் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக தொடங்கப்பட்ட 100 மையங்களில் ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று நீட் தேர்வை எழுதினர். இந்தநிலையில் இந்தாண்டுக்கான 412 நீட் தேர்வு பயிற்சி மையங்களை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நெல்லையில் இன்று தொடங்கி வைக்கிறார். அதேநேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மையங்களில் நீட் பயிற்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post