கோவை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற கத்தி போடும் திருவிழாவில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கத்திபோடும் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் தங்களது உடலில் கத்தியால் காயத்தை ஏற்படுத்திக் கொண்டு, சவுடேஸ்வரி அம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற கத்திபோடும் திருவிழாவில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி ஊர்வலமாகச் சென்ற பக்தர்கள், நெசவாளர் காலனியில் தொடங்கி பூ மார்க்கெட் வழியாக மீண்டும் அம்மன் கோவிலை வந்தடைந்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற அம்மன் திருக்கல்யாண வைபவத்தில் பக்தர்கள் பங்கேற்றனர்.