நாராயணதேவன்பட்டி கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்

தேனி நாராயணதேவன்பட்டி பகுதியில் கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வனின் அண்ணன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவர், தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வனின் அண்ணன் தாமரை செல்வன் என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வாங்கிய கடனுக்கு மேல் வட்டி கட்டிய பிறகும் பணம் கேட்டு தங்க தமிழ்ச்செல்வனின் அண்ணன் தாமரை செல்வன் மிரட்டியதால் மனமுடைந்த செல்வி, தற்கொலைக்கு முயன்று, உயிருக்கு ஆபத்தான முறையில் செல்வி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

செல்வியின் மகன் அசோக் கொடுத்த புகாரையடுத்து, தாமரை செல்வன் உட்பட இந்த சம்பவத்தில் தொடர்புடைய கலைநேசன், ஆண்டவர், சந்திரன் ஆகிய 4 பேர் மீது ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version